வைரல்

”நான் என்ன கேட்டா, என்ன அனுப்பிருக்கீங்க?” - ஃப்ளிப்கார்ட்டின் சொதப்பலால் ஷாக்கான மும்பை வாலிபர் !

OTP எண்ணை பகிராமல் அந்த பார்சலை அப்படியே வீடியோ எடுத்ததோடு, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடமும் இது தொடர்பாக முறையிட்டிருக்கிறார்.

”நான் என்ன கேட்டா, என்ன அனுப்பிருக்கீங்க?” - ஃப்ளிப்கார்ட்டின் சொதப்பலால் ஷாக்கான மும்பை வாலிபர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட அனைத்து விதமான இ-காமர்ஸ் தளங்களிலும் விழாக்கால சலுகை நாட்கள் நடைபெற்று வருகிறது. அதிக விலைகொண்ட பொருட்கள் இதுப்போன்ற சலுகைகளின் போது மலிவு விலையில் கிடைப்பதால் மக்களும் ஏராளமான பொருட்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.

அதன்படி, ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், ஐபோன் 12 ஆர்டர் செய்த இளைஞருக்கு டெலிவரி செய்யப்பட்டது என்னவோ பிரபல நிர்மா சோப்தான்.

மும்பையைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர்தான் ஃப்ளிப்கார்ட்டில் ஐபோன் 12 மாடல் போனை தள்ளுபடி விலையில் (ரூ.52,999) ஆர்டர் செய்திருக்கிறார். இதனையடுத்து ஃப்ளிப்கார்ட்டில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட பார்சலை அன்பாக்ஸ் செய்தபோது உள்ளே இருந்தது சோப் எனத் தெரியவந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அதோடு விட்டுவிடாமல் சாமர்த்தியமாக OTP எண்ணை பகிராமல் அந்த பார்சலை அப்படியே வீடியோ எடுத்ததோடு, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடமும் இது தொடர்பாக முறையிட்டிருக்கிறார்.

இதனையடுத்து ஆர்டர் மாறியதற்கான விளக்கங்களை கொடுத்ததோடு, பணத்தையும் திரும்ப செலுத்திவிடுவதாக ஃப்ளிப்கார்ட் தரப்பு உத்தரவாதம் அளித்திருக்கிறது. அதுபோல பணமும் திருப்பி தரப்பட்டிருக்கிறதாம்.

ஆன்லைனில் விலையுயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் போது இவ்வாறான தவறுகள் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் இருந்து இது போன்ற நிகழ்வு நடைபெறுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று நம்பகத்தன்மையை குறைத்திருப்பதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories