தமிழ்நாடு

22 வயதில் பஞ்சாயத்து தலைவரான பொறியியல் மாணவி... 796 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

22 வயது பொறியியல் பட்டதாரியான இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

22 வயதில் பஞ்சாயத்து தலைவரான பொறியியல் மாணவி... 796 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தென்காசி மாவட்டத்தில் 22 வயது பொறியியல் பட்டதாரியான இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 22 வயதான பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த சாருகலாவும் (22) போட்டியிட்டார்.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்படி 21 வயதான சாருகலா 3,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற சாருகலா கோவையில் உள்ள கல்லூரியில் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.

தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குத் தேர்வான சாருகலாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தன்னை வெற்றி பெறவைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ள சாருலதா, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories