தமிழ்நாடு

வன்முறையை தூண்டும் வகையில் கொச்சை பேச்சு.. யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - நடந்தது என்ன?

கலவரத்தை உண்டாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் பதட்டமான சூழல் உருவாகும் நோக்கிலும் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறையை தூண்டும் வகையில் கொச்சை பேச்சு.. யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலிஸார் அனுமதி மறுத்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பேச்சாளர் யூ டியூபர் சாட்டை துரைமுருகன், “தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதோடு, நாங்கள் விடுதலைப்புலி பிரபாகரனின் பிள்ளைகள். ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்திக்கு ஏற்பட்ட கதி தெரியுமா?” என மிரட்டல் விடுத்தும், கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்.

இதுதொடர்பாக சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட இருவர் மீது தக்கலை உதவி ஆய்வாளர் ராஜசேகர் கொடுத்த புகாரில் போலிஸார் சாட்டை 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னைக்கு செல்ல முயன்ற சாட்டை முருகனை நள்ளிரவில் போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 - ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலிஸார் சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது சிறுநீரக பிரச்சனை எனக் காரணம் கூறி, இனி இப்படி பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு ஜாமீன் வாங்கினார். பின்னர் 55 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கன்னியாக்குமரியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories