தமிழ்நாடு

“திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை” - என்ன காரணம் ? : சென்னையில் நடந்த சோகம்!

தாம்பரம் அருகே திருமணமான ஆறே மாதத்தில் கடன் தொல்லை காரணமாக புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை” - என்ன காரணம் ? : சென்னையில் நடந்த சோகம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர் 2 தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் தினகரன். இவருடைய மனைவி மெர்லின். இவர்களுக்கு திருமணமான 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று வழக்கம் போல் கடைக்கு சென்ற தினகரன் இரவு வேகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரின் தாய் கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது மூடியிருந்த முன் கதவை திறந்த பார்த்த போது மின் விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தினகரன் தொங்கிய நிலையில், இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்த போலிசார் நடத்தபட்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை இருந்து வந்ததால் அதன் காரணமாகவே மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாதாக தெரிய வந்துள்ளது. திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories