தமிழ்நாடு

“போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ஏமாறவேண்டாம்” : கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் எச்சரிக்கை!

கலைஞர் தொலைக்காட்சியில் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக போலியான தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் இத்தகவலை மறுத்துள்ளது.

“போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ஏமாறவேண்டாம்” : கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் எச்சரிக்கை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக போலியான தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் இத்தகவலை மறுத்துள்ளது.

படித்த இளைஞர்களும் இளம்பெண்களும் வேலை தேடுவதை தங்களுக்கு சாதகமகப் பயன்படுத்திக் கொண்டு சில போலி நிறுவனங்கள் பொய்யான ஆட்சேர்ப்பு தகவல்களை வெளியிட்டு ஏமாற்றி வருகின்றன.

அந்தவகையில், கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதாகவும், தேவையான ஆவணங்களோடு கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தை அணுகுமாறும் ஒரு தகவல் topmncwalkins.in என்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

“போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ஏமாறவேண்டாம்” : கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் எச்சரிக்கை!
Admin

இதுபோன்ற எந்தவொரு ஆட்சேர்ப்பு அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை என்றும், போலியான அறிவிப்புகளை நம்பி எவரும் ஏமாறவேண்டாம் என்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories