தமிழ்நாடு

“இந்தியில் ஒட்டப்பட்ட அறிவிப்பு.. குழப்பமடைந்த UPSC தேர்வாளர்கள்” : தமிழ்நாட்டில் தொடரும் இந்தி திணிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு மையங்களில் இந்தியில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்ததால் தேர்வாளர்கள் அவதியடைந்தனர்.

“இந்தியில் ஒட்டப்பட்ட அறிவிப்பு.. குழப்பமடைந்த UPSC தேர்வாளர்கள்” : தமிழ்நாட்டில் தொடரும் இந்தி திணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட 24 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து காலியாக உள்ள 712 இடங்களுக்கான தேர்வு இன்று காலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 31 ஆயிரம் பேர் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்காக சென்னை, கோவை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 77 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி இன்று காலையில் தேர்வு தொடங்கியது.

இந்நிலையில், அயனாவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்காக ஒட்டப்பட்ட அறிவிப்பு இந்தியில் இருந்தை பார்த்து தேர்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லாததால் அந்த அறிவிப்பில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் குழப்பமடைந்தனர். இதேபோல பல மையங்களிலும் இந்தியிலேயே அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் அஞ்சல் துறை, தேர்வுகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக இந்தியைத் திணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories