தமிழ்நாடு

“உடல் நலத்தையும் கவனியுங்கள்.. All The Best” : நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று காலை சென்னை - ஐ.ஐ.டி வளாகத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது அங்கிருந்த பலரும் முதல்வரை பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உடல் நலத்தையும் கவனியுங்கள்.. All The Best” : நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள், அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று காலை சென்னை - ஐ.ஐ.டி வளாகத்தில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, “தமிழக அரசு நிர்வாகத்தில் நல்ல ஏற்பட்டுள்ளது.. லஞ்சத்தை ஒழித்து இந்திய அளவில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக வர வேண்டும்” என அங்கு அவரைச் சந்தித்த மற்றொரு நடைப்பயிற்சியாளர் முதலமைச்சர்அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் முதலமைச்சர் அவர்களிடம் கூறியதாவது:- நீங்கள் 5 கோடி மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை விரைந்து வழங்கினீர்கள். நிர்வாகத்திலும் நிறைய மாறுதல்கள் செய்து வருகிறீர்கள். இதை நீங்கள் அப்படியே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி - இதேபோன்ற ஊழல் இல்லாத ஆட்சி நடத்தினால், இந்திய அளவில் தமிழகம் - நம்பர் 1 மாநிலம் என்று பெயர் பெறும். அதற்கு தாங்கள், தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். ‘ஆல் தி பெஸ்ட்’” இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories