தமிழ்நாடு

“திருவாரூர் மண்ணிலிருந்து கிளம்பி திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் பிறைசூடன்” : முதல்வர் இரங்கல்!

பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திருவாரூர் மண்ணிலிருந்து கிளம்பி திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் பிறைசூடன்” : முதல்வர் இரங்கல்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இச்செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிறைசூடன் கடந்த 1985ஆம் ஆண்டு ’சிறை’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்த் நடித்த ’ராஜாதி ராஜா’ ’மாப்பிள்ளை’ ’பணக்காரன்’ உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

பாடலாசிரியர் பிறைசூடன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 65. பிறைசூடன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிறைசூடன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு" என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories