தமிழ்நாடு

சூட்கேசுக்குள் துப்பாக்கி குண்டை எடுத்துச் சென்ற ராணுவ வீரர்.. விமான நிலையத்தில் பரபரப்பு - என்ன காரணம்?

சென்னை விமானநிலையத்தில் டெல்லி செல்ல வந்த திருச்சியை சோ்ந்த ராணுவ வீரரின் சூட்கேசுக்குள் துப்பாக்கி குண்டை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சூட்கேசுக்குள் துப்பாக்கி குண்டை எடுத்துச் சென்ற ராணுவ வீரர்.. விமான நிலையத்தில் பரபரப்பு - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணிக்கு டெல்லி செல்லும் ஏா் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவா்கள் உடமைகளையும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போ,து திருச்சியை சேர்ந்த விக்னேஷ்(30) என்பவா் அந்த விமானத்தில் டெல்லி செல்ல வந்தாா். அவா் ராணுவத்தில் பணியாற்றுகிறாா். அவருடைய உடமைகளை சோதனை செய்தனா். அவருடைய சூட்கேஸ்சை சோதித்தபோது, அதனுள் அபாயகரமான பொருள் இருப்பதாக அலரம் ஒலித்தது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் சூட்கேசை திறந்து பாத்த்தனர். அதில் விக்னேஷின் ராணுவ உடைக்குள் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து விக்னேஷிடம் அதிகாரிகள் விசாரித்த போது, ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறேன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்கு திரும்புகிறேன் என்றார். விமானத்தில் துப்பாக்கி,குண்டு போன்ற அபாயகரமான பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்பதால் அவரது பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனா்.

மேலும் ராணுவ வீரா் விக்னேஷ்சையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டையும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய போலிஸில் ஒப்படைத்தனா். இது தொடர்பாக விமான நிலைய போலிஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் ராணுவ வீரரின் சூட்கேஸ்சிலிருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories