தமிழ்நாடு

“100 நாள் வேலை குறித்து வகுப்பு எடுக்கிறேன்.. வாங்க” : சீமான், அண்ணாமலைக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் MP!

100 நாள் வேலைத்திட்டம் குறித்து வகுப்பு எடுக்கிறேன்.. தவறாமல் வாருங்கள் என அண்ணாமலைக்கும், சீமானுக்கும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

“100 நாள் வேலை குறித்து வகுப்பு எடுக்கிறேன்.. வாங்க” : சீமான், அண்ணாமலைக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயத்தை வாழவைக்க வேண்டுமானால் நூறு நாள் வேலைத் திட்டத்தையே ஒழிக்க வேண்டும். கண்மாய்க்கரையில் உட்கார்ந்து கொண்டு சீட்டாடுவதும், பல்லாங்குழி ஆடுவதும்தான் இதில் நடந்து கொண்டிருக்கிறது.

அதே கிராமத்தில் விவசாய வேலைகளுக்கு ஆளே கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் கூட்டத்தில் பேசுகையில் கூறியிருக்கிறார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், சீமான் நூறு நாள் வேலை திட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்தை எந்தக் கட்சியும் ஆதரிக்காத நிலையில், முதல் ஆளாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆதரித்துள்ளார்.

அண்ணாமலை, சீமான் ஆகியோரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் நூறு நாள் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டம் குறித்து வகுப்பு எடுக்கிறேன்.. தவறாமல் வாருங்கள் என அண்ணாமலைக்கும், சீமானுக்கும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், “100 நாள் வேலை திட்டத்தை பற்றி தொடர்ந்து தவறாகப் பேசிவரும், பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டங்களில் பார்வையிட்டு 100 நாள் வேலை திட்டத்தின் உடைய பலனையும், சமூக பொருளாதார மாற்றைத்தையும் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு அழைப்பும்,கடிதமும் தனித்தனியாக விடுத்திருக்கிறேன். வருவார்கள் என்றும் அறிந்து கொள்வார்கள் என்றும் நம்பிக்கை இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. மாணிக்கம் தாகூர், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2006ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தால் கிராமப்புற மக்களின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஏழ்மை, வறுமையால் மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் இத்திட்டத்தின் அருமை பெருமையை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் வந்து பார்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். லட்சக்கணக்கான குடும்பங்களைக் காக்கும் இத்திட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories