தமிழ்நாடு

“என்னைப்போல 3 பெண்கள்” : கணவரின் 4வது திருமணத்தால் அதிர்ச்சி - கலெக்டரிடம் மனைவி அளித்த பகீர் புகார்!

4 பெண்களைத் திருமணம் செய்து மோசடி செய்துள்ளதாகக் கணவன் மீது மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

“என்னைப்போல 3 பெண்கள்” : கணவரின் 4வது திருமணத்தால் அதிர்ச்சி - கலெக்டரிடம் மனைவி அளித்த பகீர் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவருக்குக் கடந்த 2012ம் ஆண்டு சந்தியா என்று பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஆண், பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரம் திருப்பூரில் தங்கி வேலை செய்வதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது சிங்காரம், தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இதேபோன்று இரண்டு பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.

இது பற்றி அறிந்த சந்தியா அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத்தட்டிக் கேட்டபோது :"நான் அப்படிதான் இருப்பேன். உனக்கு பிடிக்வில்லை என்றால் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள். என்னைக் கைது செய்தாலும் நான் ஆறு மாதத்தில் வெளியே வந்துவிடுவேன்" என சிங்காரம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்தியா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories