தமிழ்நாடு

“4 மாத குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்” - சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

தருமபுரி அருகே பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“4 மாத குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்” - சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன் - அனிதா தம்பதியர். திருமணம் நடந்து 5 வருடங்களான இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு 4 மாதங்கள் ஆனதாகக் கூறப்படுகிறது.

இதில் இரண்டாவதாக பிறந்த குழுந்தைக்கு கால்கள் சற்று குறைபாடாக இருந்ததாலும், கணவரின் வருமானத்தில் குடும்பத்தை சரியாக நடத்தமுடியவில்லையே என்ற மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார் அனிதா.

இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அனிதா, தனது இரண்டாவது குழந்தைக்கு பாலில் எலி பேஸ்டை கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல், தாயும், குழந்தையும் கதறி அழுதுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories