தமிழ்நாடு

வன்கொடுமை செய்து சிறுமியின் கருவைக் கலைத்த வாலிபர்.. உடந்தையாக இருந்த குடும்பம் : 4 பேர் கைது!

சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வன்கொடுமை செய்து சிறுமியின் கருவைக் கலைத்த வாலிபர்.. உடந்தையாக இருந்த குடும்பம் : 4 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா. இவரது தனது தங்கையின் தோழியைக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இது குறித்து பூபதி ராஜாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.

பின்னர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பூபதி ராஜாவின் பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அப்போது அவர்களும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் பூபதி ராஜா, அவரது தந்தை துரை, தாய் சுசீலா நண்பர் சௌந்தர பாண்டியன் ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories