தமிழ்நாடு

கல்குவாரியில் குளிக்கப்போன சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்... நெல்லை அருகே சோகம்!

நெல்லையில் கல்குவாரியில் தேங்கியிருந்த மழைநீரில் குளித்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரியில் குளிக்கப்போன சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்... நெல்லை அருகே சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்லை மாவட்டம், தாழையூத்துப்பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி. அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் கார்த்திக். நண்பர்களான இரண்டு சிறுவர்களும் சைக்கிளில் தாழையூத்து பகுதியில் இருக்கும் கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த இருவரும் அதில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அந்த வழியாகச் சென்றவர்கள் கல்குவாரி அருகே சிறுவர்களின் சைக்கிள் இருப்பதைக் கண்டு சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தபோது இருவரும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது.

கல்குவாரியில் குளிக்கப்போன சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்... நெல்லை அருகே சோகம்!

பின்னர் போலிஸார் உதவியுடன் அப்பகுதி மக்கள் கல்குவாரியில் மூழ்கிய இருவர் உடலையும் மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories