தமிழ்நாடு

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி இளைஞர் பலி..திருப்பூரில் சோகம்!

அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி இளைஞர் பலி..திருப்பூரில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் ஆதித்யா ராம். இவர் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரது நண்பன் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நேற்று திண்டுக்கல் சென்றுள்ளார்.

பின்னர் நண்பனைச் சந்தித்து ஆதித்யா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்றொரு நண்பன் செல்வகுமாருடன் இணைந்து தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் ஆதித்யா குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம் - நீரில் மூழ்கி இளைஞர் பலி..திருப்பூரில் சோகம்!

இதனால் அதிர்ச்சியடைந்த சக நண்பவர் அவரை மீட்டக முயற்சி செய்தார். ஆனால் அவர்களால் ஆதித்யாவை மீட்க முடியாமல் போனது. பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் இரண்டு மணி நேரம் போராடி ஆதியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் ஆதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வந்த கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories