தமிழ்நாடு

வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டெழுந்த சி.எஸ்.கே.. ப்ளே ஆஃப்ஸ்க்கு முதல் அணியாக தகுதி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில், சென்னை அணி ப்ளே ஆஃப்ஸுக்கும் தகுதிப்பெற்றிருக்கிறது.

வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டெழுந்த சி.எஸ்.கே.. ப்ளே ஆஃப்ஸ்க்கு முதல் அணியாக தகுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் எதிர்பார்த்ததை போலபே சென்னை அணி வென்றிருக்கிறது. மேலும், இந்த வெற்றி மூலம் ப்ளே ஆஃப்ஸுக்கும் முதல் அணியாக தகுதிப்பெற்றிருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியே முதலில் பேட் செய்திருந்தது. போட்டி ஷார்ஜாவில் வைத்து நடைபெற்றது. இருப்பதிலேயே குட்டியான மைதானம். கடந்த சீசனில் வீரர்கள் இந்த மைதானத்தில்தான் அதிக ரன்களை எடுத்தனர். ஆனால், இந்த முறை அப்படியே தலைகீழாக இருக்கிறது. மூன்று மைதானங்களில் இந்த மைதானத்தில்தான் குறைவான ரன்கள் வந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 125 ரன்களை அடிக்க முடியாமல் இங்கேதான் தோற்றது.

இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சன்ரைசர்ஸ் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய் 2 ரன்னை மட்டுமே எடுத்து ஹேசல்வுட் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆகியிருந்தார். அணியின் பெரும் நம்பிக்கையான கேப்டன் வில்லியம்சனும் 11 ரன்களில் ப்ராவோவின் பந்துவீச்சில் lbw ஆகியிருந்தார்.

வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டெழுந்த சி.எஸ்.கே.. ப்ளே ஆஃப்ஸ்க்கு முதல் அணியாக தகுதி!

அவ்வளவுதான். சன்ரைசர்ஸ் அணியில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இதற்கு மேல் பெர்ஃபார்மர்களே கிடையாது. இருக்கிறவர்களும் அணியின் தேவையை உணர்ந்து ஆடிக்கொடுக்கமாட்டார்கள். பிரியம் கர்க், அபிஷேக், அப்துல் சமத் இளம் வீரர்கள் மூவரும் கொஞ்சம் சப்போர்ட் செய்ய விருத்திமான சஹா மட்டும் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் அடித்த 44 ரன்களால் சன்ரைசர்ஸ் கொஞ்சம் கரையேறியது. கடைசியில் ரஷீத்கான் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடிக்க அந்த அணி 134 ரன்களை எட்டியது.

சென்னை அணிக்கு 135 ரன்கள். சென்னை அணி இருக்கும் ஃபார்மிற்கு இதெல்லாம் எளிமையான விஷயம். ஆனாலும், கடைசி ஓவர் வரை கொண்டு சென்றே வென்றனர்.

ஓப்பனிங்கில் ருத்ராஜ் கெய்க்வாட்டும் டூப்ளெஸ்சிஸும் எந்த குறையும் இல்லாமல் தங்கள் ஆட்டத்தை ஆடினார். ருத்ராஜ் 38 பந்துகளில் 45 ரன்களில் ஹோல்டரின் பந்துவீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்ல காரணமாக இருந்தவர் ஹோல்டர்தான். 16 வது ஓவரில் ரெய்னா மற்றும் டூப்ளெஸ்சிஸ் இருவரையும் வீழ்த்தினார். டூப்ளெஸ்சிஸ் 41 ரன்களிலும் ரெய்னா 2 ரன்களிலும் வெளியேறியிருந்தனர். இதன் மூலம் கொஞ்சம் அழுத்தம் உருவாக ஆரம்பித்தது.

வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டெழுந்த சி.எஸ்.கே.. ப்ளே ஆஃப்ஸ்க்கு முதல் அணியாக தகுதி!

கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் ஓவரில் 13 ரன்கள் வந்திருந்தது. தோனி ஒரு பவுண்டரியையும் அம்பத்தி ராயுடு ஒரு சிக்சரையும் அடித்திருந்தனர். கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசியிருந்தார். இந்த ஓவரில் ஒரு மிகப்பெரிய சிக்சரை வின்னிங் ஷாட்டாக தோனி அடித்தார்.

இப்படி ஒரு வின்னிங் ஷாட்டை தோனியிடம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் ரசிகர்கள் இதை கொண்டாடி தீர்த்தனர். மேலும், இந்த வெற்றி மூலம் சென்னை அணி முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்றிருக்கிறது. கடந்த சீசனில் முதல் அணியாக வெளியேறி அவமானகரமான தோல்வியை சந்தித்திருந்தது. அந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடந்திருந்தது.

இந்த சீசனும் கொரோனா காரணமாக விதிவசத்தால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாறியதும் தோனியும் சென்னையும் எங்கே வீழ்ந்தார்களோ அதே இடத்தில் அந்த சாம்பலிலிருந்தே மீண்டும் உயிர்பித்து வெகுண்டெழுந்து நிற்கின்றனர். 'நாங்கள் நிச்சயமாக கம்பேக் கொடுப்போம்' என கடந்த சீசனின் தோல்விக்கு பிறகு தோனி கூறியிருப்பார். தோனி அடித்த அந்த சிக்சர் மூலம் சி.எஸ்.கே சொன்னதை செய்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories