தமிழ்நாடு

வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை: கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை: கைது நடவடிக்கைக்குத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார்கள் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடமும் அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையின் உதவியாளர் முருகானந்தம் அவரது மனைவி பஞ்சாயத்துத் தலைவர் காந்திமதிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முருகானந்தம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவியாளராகவும் அவரது மனைவி 'காந்திமதி முள்ளம் குறிச்சி பஞ்சாயத்துத் தலைவராகவும் உள்ளனர். இவர் முன்னால் அமைச்சர் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் மேலும் தமிழ்நாடு முழுவதும் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் காண்ராக்ட் எடுத்து வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கைது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories