தமிழ்நாடு

கொடநாடு வழக்கு.. கொள்ளை நடந்த அன்றே குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அ.தி.மு.க முக்கிய புள்ளி?: ‘பகீர்’ தகவல்!

கொடநாடு கொள்ளை சம்பவத்தின் போது, பிடித்து வைத்திருந்த குற்றவாளிகளை அதிமுகவை சேர்ந்த ஒருவர் விடுவிக்குமாறு போலிஸாரை கட்டாயப்படுத்தியதால், குற்றவாளிகள் விடுவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு வழக்கு.. கொள்ளை நடந்த அன்றே குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அ.தி.மு.க முக்கிய புள்ளி?: ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை , கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், கனகராஜ் மர்மான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இரண்டாவது குற்றவாளி சாயன் மனைவி குழந்தையுடன் கேரளாவுக்கு செல்லும் போது , மர்ம வாகனம் மோதியதில் சயான் மனைவி குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர். கொடநாடு கணினி பொறியாளர் தற்கொலை என இந்த கொள்ளை சம்பவத்தில் 5 மர்ம மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு போலிஸார் கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தி அவசரம் அவசரமாக வழக்கை முடிக்க முயற்சித்தனர்.

பல மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கில் மறு புலன் விசாரணை தேவை என கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது குற்றவாளி சாயன் தரப்பில் பல உண்மை சம்பவங்களை கூற இருப்பதால் மறு புலன் விசாரணை தேவை என காவல் துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தபோது,அப்போது மறு விசாரணை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலிஸ் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில். தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் ஒன்று கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பல குழுக்களாக வரைபடத்துடன், இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்டோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தனிப்படை போலிஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களில் பலர் கொள்ளை சம்பவத்திற்கு பிறகு குன்னூர், மற்றும் கோத்தகிரி வழியாக கோவைக்கும், கூடலூர், நாடுகாணி வழியாக கேரளாவுக்கு தப்பிச் செல்லும்போது பலரை சந்தேக வழக்கில் போலிஸார் பிடித்து விசாரணைக்காக வைத்திருந்தபோது, அப்போது ஆளும் கட்சியாக இருந்த போது அதிமுகவை சேர்ந்த ஒருவர் அவர்களை விடுவிக்குமாறு போலிஸாரை கட்டாயப் படுத்தியதால், போலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் தப்பி சென்றுள்ளதாக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த அன்று , வரைபடத்துடன் எஸ்டேட்டுக்குள் சென்ற பலரை போலிஸார் கைது செய்யாமல், அவர்களை தப்பிக்க வைத்தது தற்போது தெரியவந்துள்ளது.

அவ்வாறு கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்த பலரை தனிப்படை போலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக தனிப்படை போலிஸார் வட்டாரங்கள் தெரிவித்து வருவதாக குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories