தமிழ்நாடு

’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு

கணவர் இறந்த சோகத்தில் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய், தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தாய் மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்பு.

’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அவரது கணவர் முனியப்பன். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ஆவடி ரயில் நிலையம் அருகே முனியப்பன் ரயில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த நாள் முதல் ஐஸ்வர்யா மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்துள்ளார். கணவர் இறந்த பிறகு இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள ஐஸ்வர்யா, இன்று அவரது வீடு அருகே உள்ள பச்சையம்மன் கோயில் கிணற்றில் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

’அவர்தான் என்ன வரச் சொன்னாரு’ - கணவர் இறந்ததால் மனச்சோர்வு; கிணற்றில் குதித்த மனைவி - சென்னையில் பரபரப்பு
DELL

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஐஸ்வர்யா கணவர் தன்னை அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் காணப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறியதோடு உறவினர்களிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories