தமிழ்நாடு

“பள்ளி மாணவியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்” : போக்சோவில் கைது செய்து போலிஸார் விசாரணை!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

“பள்ளி மாணவியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்” : போக்சோவில் கைது செய்து போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், அழகானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. ஆட்டோ ஓட்டிவரும் இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் வீரமணி பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தபோதும், தொடர்ந்து வீரமணி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவி உங்களுக்குத் திருமணமாகிவிட்டதே பின்னர் ஏன் தொல்லை செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர் திருமணமாகியும் எனக்குக் குழந்தையில்லை. மேலும் நான் உன்னை உன்மையாகக் காதலிக்கிறேன் என ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார்.

பிறகு அந்த மாணவியை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையாரிடமும் கூறக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வீரமணி மீது போக்காகச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

banner

Related Stories

Related Stories