தமிழ்நாடு

“தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சென்னையில் தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தாய் உயிரிழந்த சோகத்தில் கூவம் ஆற்றில் குதித்து மகன் தற்கொலை” : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கீரிம்ஸ் சாலை அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 20 வயதாகும் சதீஷ்குமார் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அம்மாவோடு வசித்து வந்த சதீஷ்குமார் தான் குடும்பத்தைக் கவணித்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அம்மாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், சதீஷ்குமாரின் தயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானர். தனது தாயின் மீது அளவுக்கடந்த பாசத்தில் இருந்த சதீஷ்குமார் அம்மா இறந்ததில் இருந்து கடும் மன உலைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் கூவம் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.

ஆனால், கூவம் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற சதீஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories