தமிழ்நாடு

பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவையில் வழக்குப் பதிவு : நடந்தது என்ன?

பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவையில் வழக்குப் பதிவு : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஃபார்முலா கார் பந்தயம் மூலம் எல்லோருக்கும் பரிச்சயமானவர் நரேன் கார்த்திகேயன். கோவையைச் சேர்ந்த இவர் மீது பிரித்வி ராஜ்குமார் என்பவர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

பிரித்வி ராஜ்குமாரின் புகாரில், கோவை தொண்டாமுத்தூரில் உள்ள தனது நிலத்திற்குச் செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் மறித்துத் தடுப்பு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த புகாரின் அடிப்படையில் தொண்டாமுத்தூர் போலிஸார் நரேன் கார்த்தியேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் பிரித்வி ராஜ்குமார் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ராஜ்குமார் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிலப்பிரச்சனை தொடர்பான இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories