இந்தியா

Youth's Anthem ‘மணிகே மாகே ஹிதே’ பாடகி இந்திய - இலங்கைக்கான கலாச்சார தூதுவராக நியமனம்!

இந்தியா - இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராக பாடகி யோஹானி டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Youth's Anthem ‘மணிகே மாகே ஹிதே’ பாடகி இந்திய - இலங்கைக்கான கலாச்சார தூதுவராக நியமனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘மணிகே மாகே ஹிதே’ என்ற பாடலை கேட்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தளவிற்கு வைரலானது இந்தப் பாட்டு. இளைஞர்கள் பெரும்பாலானோர் சில நாட்களாக இந்தப் பாடலையே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தளவுக்கு ஹிட் அடித்த பாடலைப் பாடியவர் இலங்கையைச் சேர்ந்த பாடகி யோஹானி டி சில்வா. யூடியூபில் பாடல்கள் பாடி வெளியிட்டு வரும் இவர் ‘மணிகே மாகே ஹிதே’ பாடலை டிக்டாக்கிற்காக முதலில் பாடியுள்ளார்.

பின்னர், தான் இந்தப் பாடலுக்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடல் வெளிவந்து மூன்றே மாதத்தில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களிடம் சென்றடைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 116 மில்லியன் பேர் இந்தப் பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்தப் பாடல் இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்தியா - இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராகப் பாடகி யோஹானி டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதில், இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத் தூதுவர் யோஹானி டி சில்வாவை நியமித்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம். யூடியூபில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட 'மணிகே மாகேஹிதே' பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பல மில்லியன் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

இது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவைப் பிரதிபலிக்கின்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோஹானி கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories