
காட்பாடியைச் சேர்ந்தவர் ஆடம்ஸ். ஆட்டோ ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து, பக்கத்து வீட்டில் இருக்கும் இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுள்ளார். பிறகு ஆடம்ஸ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அடுத்தநாள் வீட்டிற்கு வந்த ஆடம்ஸை அப்பகுதி மக்கள் பிடிக்க முயன்றபோது, ஆடம்ஸ் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வீட்டிற்குள் புகுந்து ஆடம்ஸை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அரவது செல்போனை ஆய்வு செய்தபோது 15க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பெண்கள் குளிக்கும் வீடியோக்களும் செல்போனில் இருந்துள்ளன.
இதையடுத்து போலிஸார் ஆடம்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








