தமிழ்நாடு

“அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்து” : தாயைக் காண வந்த புதுமாப்பிள்ளை பலி!

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்து பதிரியார், திருமணம் நடைபெறவுள்ள புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்து” : தாயைக் காண வந்த புதுமாப்பிள்ளை பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூரை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ, தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் அதிவேகமாக சென்றபோது, அட்டோ அருகே ஆம்னி பேருந்து வந்துள்ளது. அதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர் வலதுபுறம் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாடை இழந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது.

இதில் ஆட்டோ இரண்டு முறை குட்டிக்கரணம் அடித்து எதிர் திசையில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கடலூரை சேர்ந்த பாதிரியார் ஐசக்ராஜ், பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தர்ராஜ், நாகமுத்து ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஏழுமலை, ஆனந்த்குமார், ரஜினிகாந்த உள்ளிட்ட 5 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிக்கிசை பெற்றுவருகிறர்கள்.

பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்துவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் குன்றத்தூரில் உள்ள அவரின் அம்மாவைப் பார்த்துவிட்டு பாண்டிச்சேரி செல்ல முற்பட்டபோது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

banner

Related Stories

Related Stories