தமிழ்நாடு

ரூ.10 கூல்ட்ரிங்க்ஸ் குடித்த 2 சிறுவர்களுக்கு ரத்த வாந்தி; சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிர்ச்சி!

வீட்டின் அருகே கடையில் குளிர்பானம் குடித்த சிறுவன் ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதி..

 ரூ.10 கூல்ட்ரிங்க்ஸ் குடித்த 2 சிறுவர்களுக்கு ரத்த வாந்தி; சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் லக்ஷ்மன் சாய். வயது 6. லஷ்மன் சாயும், ஓமேஷ்வரன் (6) என்ற சிறுவனும் உறவினர்கள்.

விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் 10 ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸை வாங்கி குடித்திருக்கிறார்கள். குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களிலேயே மயக்கமாகியிருக்கிறது.

வீட்டுக்குள் வந்த சிறுவர்கள் மீது ரசாயன வாசம் வந்ததை அறிந்திருக்கிறார்கள் பெற்றோர்கள். அப்போது ரத்த வாந்தி எடுத்ததோடு இருவரும் மயங்கியதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு, சிறுவர்கள் இருவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குழந்தைகள் குடித்த கூல்ட்ரிங்க்ஸ் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் காயத்ரி தம்பதியின் 13 வயது மகள் தரணி இதே போன்று குளிர்பானம் குடித்ததில் உயிரிழந்தார் என்ற சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories