தமிழ்நாடு

“சாலையில் நடனம் ஆடியது ஏன்?” : மாடல் அழகிக்கு நோட்டீஸ் அனுப்பிய டிராபிக் போலிஸ் - நடந்தது என்ன? (வீடியோ)

“சாலையில் நடனம் ஆடியது ஏன்?” : மாடல் அழகிக்கு நோட்டீஸ் அனுப்பிய டிராபிக் போலிஸ் - நடந்தது என்ன? (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசம் மாநில இந்தூர் நகரில் எப்போது பரபரப்பு மிகுந்த சாலையாக காணப்படும் ராசோமா சதுக்கம் சாலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் சாலையில் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து சாலையில் சிக்கல் இடைவேளையில் நடனம் ஆடிய அந்த பெண், போக்குவரத்து விதியை மீறியதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதனிடையே அந்த வீடியோவில் இருப்பது ஸ்ரேயா கல்ரா என்ற மாடல் என்று கண்டிப்பித்த போக்குவரத்து போலிஸார் அவருக்கு விதி மீறல் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சாலையின் நடுவே ஏன் ஆடினேன் என்று ஸ்ரேயா கல்ரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முககவசம் மற்றும் சாலை விதிகளை மீறக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியார் தொண்டு நிறுவனம் ஸ்ரேயா கல்ரா அனுக்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வுக்கு ஸ்ரேயா கல்ரா ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அம்மாவட்ட காவல்துறி அனுமதியோடு இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 18ம் தேதி ராசோமா சதுக்கம் சாலையில் சிக்னல் இடைவெளியில் ஸ்ரேயா கல்ரா விழிப்புணர்வு நடனமாடியுள்ளார். மேலும் இதனை தொண்டுநிறுவனம் சாரில் வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்களிடம் முறையாக விழிப்புணர்வு குறித்து தெரிவிக்காததால் இதனைத் தவறாக புரிந்துக்கொண்டதாகவும் ஸ்ரேயா கல்ரா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து போலிஸார் அனுப்பியுள்ள விதி மீறல் நோட்டீஸை திரும்ப பெறவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே தன்மீது எந்த தவறும் இல்லை என்று ஸ்ரேயா கல்ரா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories