தமிழ்நாடு

காதலியுடன் போனில் பேசும்போது கிணற்றில் விழுந்த காதலன்.. 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு!

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பத்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.

காதலியுடன் போனில் பேசும்போது கிணற்றில் விழுந்த காதலன்.. 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷிக். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஆஷிக் நூற்பாலையில் இருக்கும் கிணறு அருகே நடந்து கொண்டு காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறுதலாகக் கிணற்றில் விழுந்துள்ளார்.

இரவு நேரம் என்பதால் இவர் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை. மேலும் நீண்ட நேரமாகக் காப்பாற்றக் கோரி அலறிய இவரின் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் இரவு முழுவதும் கிணற்றிலேயே தத்தளித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் காலையில் கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறதே என சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது ஆஷிக் கிணற்றிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆஷிக்கை கிணற்றிலிருந்து மீட்டனர். அவருக்குக் கையில் முறிவு ஏற்பட்டிருந்ததால் உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

banner

Related Stories

Related Stories