தமிழ்நாடு

"உயிரை விடத் தேர்வு ஒன்றும் பெரிதல்ல" : மாணவர்களுக்கு நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்!

ஒரு தேர்வு உங்கள் உயிரை விடப் பெரிதல்ல என மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.

"உயிரை விடத் தேர்வு ஒன்றும் பெரிதல்ல" : மாணவர்களுக்கு நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 'நீட்' தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு கானல் நீராகியுள்ளது. மேலும் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நுழைவுத் தேர்வு முடிந்து ஒரே வாரத்தில் தமிழ்நாட்டில் தனுஷ், கனிமொழி, சவுந்தர்யா ஆகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் அணு என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஒரு தேர்வு உங்கள் உயிரைவிடப் பெரிதல்ல என மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், "எந்த ஒரு கவலையானாலும் சில காலத்துக்குப் பிறகு குறைந்துவிடும். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அவசியம்; மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. தேர்வு என்பதைத் தாண்டி வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன; ஒரு தேர்வு உங்கள் உயிரை விட பெரிதல்ல.

நானும் பல்வேறு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளேன். மனதில் கஷ்டம் இருந்தால் பிடித்தவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். பயம், கவலை, வேதனை, விரக்தி இவை அனைத்தும் சிறிது நேரத்தில் மறையும் விஷயங்கள். தற்கொலை செய்துகொள்வது உங்களைப் பிடித்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை.

மாணவர்களை புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கின்றோம். நம்பிக்கையுடன் தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயித்து விடலாம். அச்சமில்லை... அச்சமில்லை... அச்சம் என்பது இல்லையே.. " எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories