தமிழ்நாடு

காரில் சென்ற பெண் மருத்துவர் மழைநீரில் மூழ்கி பலி: அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய தரைப்பாலத்தால் நடந்த அவலம்!

தரைப்பாலத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி காரில் பயணித்த சத்யா என்ற பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் சென்ற பெண் மருத்துவர் மழைநீரில் மூழ்கி பலி: அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய தரைப்பாலத்தால் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போல ரயில்வே தரைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கன மழையால் அந்த தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், ஒரு காரும் லாரியும் தண்ணீரில் மூழ்கி காரில் பயணித்த சத்யா என்ற பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதன் விளைவாக அந்த கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக அ.தி.மு.க ஆட்சியின் போது அப்பகுதி மக்கள் தரைப் பாலம் அமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையின் மூலம் கிராம மக்களை மிரட்டி இந்த பாலத்தை அமைத்துள்ளது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த தரைப்பாலம் அமைக்கும் போது தடுத்து நிறுத்தினோம். ஆனால், காவல் துறையினரை வைத்து கிராம மக்களை மிரட்டி இந்த பாலத்தை அமைத்தனர். இந்தப் பாலம் முறையாக அமைக்கவில்லை, தரமற்ற முறையில் உள்ளது.

காரில் சென்ற பெண் மருத்துவர் மழைநீரில் மூழ்கி பலி: அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய தரைப்பாலத்தால் நடந்த அவலம்!

சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், பெரு மழைக்கு தங்கள் கிராம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லக்கூடிய தங்கள் கிராமத்திற்கு 10 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்லக் கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும். தரமற்ற முறையில் பாலம் அமைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories