தமிழ்நாடு

”பாஜகவுக்கும் தாலிபான்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை” - காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹஸன் மவுலானா குற்றச்சாட்டு!

பாஜகவிற்கும் சமூக நீதிக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹஸன் மவுலானா சுட்டிக்காட்டியுள்ளார்.

”பாஜகவுக்கும் தாலிபான்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை” - காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹஸன் மவுலானா குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாலிபான்களுக்கும் பாஜகவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை, நாட்டை அழிவை நோக்கி பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மவுலானா தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாளான சமூக நீதி நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஹஸன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், சென்னை மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகரன், நாஞ்சில் பிரசாத், மற்றும் சொர்னா சேதுராமன், சுமதி அன்பரசு உள்ளிட்ட பலர் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை நாளாக அனுசரிக்கப்பட்டது. அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரமாண்ட பேனரை கட்சி வளாகத்திற்குள் வைத்து அதனை சுற்றி இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மோடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஹஸ்ஸான் மெளலானா எம்.எல்.ஏ., இந்தியா முழுவதும் சமூக நீதியை கொண்டு வருபவர் மோடி என்று பாஜகவினர் தெரிவித்து வரும் கருத்துக்கு பதில் அளித்தார்.

அதில், பாஜகவிற்கும் சமூக நீதிக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மட்டுமே அவர்கள் கொள்கை இருப்பதாக பாசாங்கு செய்கின்றனர். தாலிபான்களுக்கும் பாஜகவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று தெரிவித்தார்.

மோடியின் ஆட்சியால் இன்று இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் 100 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவித்துள்ள மோடி 6 லட்சம் கோடிக்கு பொது நிறுவனங்களை விற்பதாகவும் அவரின் பிறந்தநாளை தேசிய வேலைவாய்ப்பின்மை தினமாக இளைஞர் காங்கிரஸ் சார்பாக கடைபிடிக்க உள்ளதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories