தமிழ்நாடு

“சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம்” : தந்தை பெரியார் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது என ம்

“சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம்” : தந்தை பெரியார் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோரால் ஏற்கப்பட்டது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு :-

“சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.

ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories