தமிழ்நாடு

“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் கணவன்” - பெண் நடன இயக்குநர் போலிஸில் புகார்!

கணவனே மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டி வியாபாரம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் கணவன்” - பெண் நடன இயக்குநர் போலிஸில் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காதலித்து திருமணம் செய்த மனைவிக்கு கணவனே பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து தூங்க வைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அதை நண்பர்களுக்கு போட்டுக்காட்டி வியாபாரம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா (27) என்ற பெண் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். தத்தெடுத்து வளர்த்த தந்தையும் இறந்த நிலையில் நடனம் கற்றுக்கொண்டு, சிங்கப்பூரில் சிறுவர் சிறுமியருக்கான நடனப் பயிற்சியாளராக 2017ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

தற்போது ‘அபாய வளைவு’, ‘வழித்துணை காதலி’ ஆகிய திரைப்படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிங்கப்பூரில் ஆட்டோமொபைல் பொறியாளராகப் பணியாற்றி வந்த 29 வயதான அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.

2019ம் ஆண்டு தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தின் முடசல் ஓடை கிராமத்திற்கு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றுள்ளார் அருண். அங்கு அருணின் பெற்றோர் சம்மதத்துடன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது.

திருமணமாகி 3 மாதங்கள் ஆன நிலையில், அருண் குடும்பத்தாருடன் ஐஸ்வர்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அருண், தனது மனைவியுடன் சென்னை சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

பின்னர் வேலைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய அருண் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு மனைவி ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஐஸ்வர்யாவை பாலியல் தொழிலுக்காக தனது நண்பர்களிடம் விற்க அருண் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஐஸ்வர்யா அச்சமடைந்து, கடலூரில் உள்ள கணவனின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மாமனார், மாமியார், ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்தும் மண்ணெண்ணெய் ஊற்றியும் கொல்ல முயற்சி செய்துள்ளனர்.

பின்னர் சிங்கப்பூர் சென்ற ஐஸ்வர்யா, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கடலுார் திரும்பியுள்ளார். அப்போது ஐஸ்வர்யா துாங்கும்போது ஆடையின்றி வீடியோக்கள் எடுத்துள்ளார் அருண். அவற்றைக் காண்பித்து, ஐஸ்வர்யாவை மிரட்டியுள்ளார்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, இதுகுறித்து விசாரித்தபோது, திருமணமான நாள் முதல் அவருக்கு அருண் துாக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகக் கொடுத்து, இதுபோன்று ஆபாச வீடியோக்கள் எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அருண் வீட்டில் இருந்து தப்பி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார் ஐஸ்வர்யா. தன் கணவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படியும் அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories