தமிழ்நாடு

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய கும்பல்.. 1 வருடத்திற்குப் பிறகு வெளியான வீடியோ: நடந்தது என்ன?

கர்நாடகாவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி  கொடூரமாக தாக்கிய கும்பல்.. 1 வருடத்திற்குப் பிறகு வெளியான வீடியோ: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை 4 வாலிபர்கள் சேர்ந்து நிர்வாணமாக்கி கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இதையடுத்து போலிஸார் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இந்த சம்பவம் யாத்கிரி நகர் பகுதியில் நடந்துள்ளது. மேலும் அந்த பெண் அப்பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு வேலையை முடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது தான் இந்த பெண்ணை நான்கு வாலிபர்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

வீடியோவில் இருந்த நான்கு பேரையும் அடையாளம் கண்டன போலிஸார், பீமராயா, லிங்கராஜூ, ஷாரானு, ஐயப்பா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. இதனால் இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ திடீரென வைரலானதால் போலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories