தமிழ்நாடு

'திருடன்' என இணையத்தில் பரப்பியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு: திருவாரூரில் சோகம்!

'திருடன்' என சமூக வலைத்தளத்தில் பரப்பியதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'திருடன்' என இணையத்தில் பரப்பியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு: திருவாரூரில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம், அலிவலம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வாகனங்களை வாடகைக்கு விடுவது மற்றும் அடமானமாக வாங்குவது போன்ற தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம் அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளார்.

இதையடுத்து, இவரால் வாங்கிய பணத்திற்குக் கடந்த இரண்டு மாதங்களாக வட்டி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்தையா சதீஷையும், அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் சதீஷை 'திருடன்' என சொல்லி பொய்யான செய்தி ஒன்றைப் சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சதீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக முத்தையாவிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories