தமிழ்நாடு

காதலிக்க மறுத்ததால் சிறுமியின் பல்லை உடைத்து இளைஞன் வெறிச்செயல் - சென்னையில் பரபரப்பு!

காதலித்த 16 வயது சிறுமி பேச மறுத்ததால் பல்லை உடைத்த வாலிபர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.

காதலிக்க மறுத்ததால் சிறுமியின் பல்லை உடைத்து இளைஞன் வெறிச்செயல் - சென்னையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அமைந்தகரை பகுதிக்குட்பட்ட புல்லா அவென்யூ பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கோடம்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது ஒரு வருடமாக ஆகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தனது பாட்டி இறந்த நிலையில் தாய் தந்தையுடன் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து தங்கியபோது கடந்த 5ம் தேதி முதல் சிறுமியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 10ம் தேதி இரவு 9 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்த ஆகாஷ் (20) சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னிடம் பேச வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுக்க, கையால் தாக்கி சிறுமியின் பல்லை உடைத்துள்ளார். இது சம்பந்தமாக மருத்துவமனையில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம் போலிஸார், ஆகாஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பேச வற்புறுத்தியது, பொது இடத்தில் வைத்து தாக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை போலிஸார் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories