தமிழ்நாடு

ப்ராங்க் யூடியூபரால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபரால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராங்க் யூடியூபரால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபரால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் சூர்யா. ப்ராங்க்ஸ்டர் சூர்யா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 'பிராங்க் பாஸ்' என்ற யூ-டியூப் சேனலில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் தனரக்ஷனா (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை விஸ்காம் படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ப்ராங்க்ஸ்டர் சூர்யாவை காதலித்து வந்துள்ளார்.

யூடியூபர் சூர்யா, தனரக்ஷனா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும், பல பெண்களிடமும் அவர் காதலிப்பதாகக் கூறி பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனரக்ஷனா கடந்த 5-ஆம் தேதி சென்னையில் சூர்யாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, இதுதொடர்பாகவும் சூர்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால், சூர்யா முறையாக பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருச்சிக்கு திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் மன உளைச்சல் அடைந்துள்ளார் தனரக்ஷனா.

சூர்யாவால் மிகுந்த விரக்தியடைந்த தனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கைகளை பிளேடால் அறுத்துக்கொண்டு, வீட்டில் தூக்கு மாட்டி கொண்டுள்ளார்.

தூக்கு போட்டுக்கொண்ட தனரக்ஷனாவின் நிலை ஆபத்தாக இருந்த நிலையில் அவரது பெற்றோர் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கவே உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் தனரக்ஷனா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories