தமிழ்நாடு

IAS ஆ, IPS ஆ.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு : ஹெச்.ராஜா வாயைத் திறந்தாலே உற்சாகம் ஆகும் இணையவாசிகள்!

“IAS ஆ, IPS ஆ பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு” போன்ற மீம்ஸ்கள் மூலம் புதிய ஆளுநருக்கு தவறாக வாழ்த்துச் செய்தி சொன்ன ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

IAS ஆ, IPS ஆ.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு : ஹெச்.ராஜா வாயைத் திறந்தாலே உற்சாகம் ஆகும் இணையவாசிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.என்.ரவி பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஆர்.என்.ரவி, அதன் பிறகு கேரளாவில் ஐ.பி.எஸ் படித்து தேர்ச்சி பெற்றார்.

கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு புலனாய்வுத் திறமையில் உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் பீரோ, தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் குழுவின் ஐ.பி மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என பல பெறுப்புக்களில் பணியாற்றிவிட்டு 2019ம் ஆண்டு நாகாலாந்துக்கு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

IAS ஆ, IPS ஆ.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு : ஹெச்.ராஜா வாயைத் திறந்தாலே உற்சாகம் ஆகும் இணையவாசிகள்!

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்கம் போல, தனது பேச்சுக்கள் மூலம் இணைய வாசிகளை குஷி படுத்தியுள்ளார் ஹெச்.ராஜா.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிகப்பட்டுள்ள ஆர்.என்.ரவி யார் என்றுக்கூட முழுவதுமாக படிக்காமல் போறகிற போக்கில் ஹெச்.ராஜா சொன்ன வாழ்த்துச் செய்திதான் இப்போது இணையத்தில் வைரல் கண்டன்ட்.

புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “Naga Insurgency பிரச்சினையில் மிகச்சிறப்பாக கையாண்டு தீர்வு கண்ட முன்னாள் IAS அதிகாரி திரு. R.N.ரவி அவர்கள் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆகவே அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதில், IPS என்பதற்கு பதிலாக IAS எனக் குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜாவின் பதிவை கையில் எடுத்த நெட்டிசன்கள், “IAS ஆ, IPS ஆ பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு” போன்ற மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர். மேலும் வாழ்த்துச் சொல்லும் முன் அவர் யார் என்பதை தெரிந்துக்கொண்டு வாழ்த்துச் சொல்லவும் என விமர்சித்து வருகின்றனர். மேலும் இத்தகைய விமர்சனத்துக்கு பிறகு ஹெச்.ராஜா தனது பதிவை திருத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories