தமிழ்நாடு

ஆப்பை எடுத்து சொருகிக் கொண்ட அண்ணாமலை : “மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே”-குவியும் போஸ்ட் கார்டுகள்!

அண்ணாமலையின் அறிவுறுத்தலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, பலரும் அண்ணாமலைக்கு போஸ்ட் கார்டு அனுப்பி வருகின்றனர்.

ஆப்பை எடுத்து சொருகிக் கொண்ட அண்ணாமலை : “மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே”-குவியும் போஸ்ட் கார்டுகள்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரானா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை பா.ஜ.கவினரும், இந்து முன்னணி போன்ற அமைப்புகளும் திரித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கூடி கொண்டாட வேண்டாம் என்ற முதலமைச்சருக்கு பா.ஜ.க தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தபால் அட்டையில் எழுதி அனுப்பி வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அண்ணாமலையின் அறிவுறுத்தலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, தி.மு.கவினர் பலரும் அண்ணாமலைக்கு போஸ்ட் கார்டு அனுப்பி வருகின்றனர்.

ஆப்பை எடுத்து சொருகிக் கொண்ட அண்ணாமலை : “மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே”-குவியும் போஸ்ட் கார்டுகள்!

தபால் அட்டைகளில், “மதத்தை வைத்து பிழைப்பு நடத்தாதே; மக்கள் பிரச்சினையை பேசு!” என்பது போன்ற வாசகங்களை எழுதி பலரும் அண்ணாமலைக்கு அனுப்பி வருகின்றனர்.

திராவிட இயக்க ஆதரவாளர்களின் குழந்தைகள் பலரும் பா.ஜ.க அலுவலகமான கமலாலய முகவரிக்கு இதுபோன்ற தபால் அட்டைகளை அனுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories