தமிழ்நாடு

2 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு... டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு... டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி ரூபாய் 5 கோடி மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் ஆன்லைனில் மது விற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6 ஆயிரத்து 761 மேற்பார்வையாளர்கள் 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் ஆக மொத்தம் 25009 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள் மேற்குறிப்பிட்டுள்ள பணியாளர்கள் தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ர்ல 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 15.01 கோடி நிதி கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் கொரனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளின் படி பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆண்டுதோறும் உயர்ந்து வந்த வருவாய் இந்த ஆண்டு 75% குறைந்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 133 கோடி ரூபாய் மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்திருப்பதாகவும் 2020 -21 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கொரனா பரவல் காரணமாக பெரும்பாலான நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் மதுவின் மூலம் 7 ஆயிரத்து 907 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருப்பதாகவும் அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 75% வருவாய் கிடைத்திருப்பதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்குமார் அறிவித்ததை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தான் அந்த கோரிக்கை தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories