தமிழ்நாடு

"இவரால் காவல்துறைக்கே களங்கம்": வியாபாரியிடம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் வழக்கில் நீதிபதி கண்டனம்!

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என வியாபாரியிடம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

"இவரால் காவல்துறைக்கே களங்கம்": வியாபாரியிடம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் வழக்கில் நீதிபதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த வியாபாரியிடம் ரூபாய் 10 லட்சம் பணத்தைப் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தியை போலிஸார் கைது செய்தனர்.

இதற்கு முன்னதாகவே வசந்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது விசாரித்த நீதிபதிகள் உடனே அவரை கைது செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த வசந்தியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் ஜாமின் மனுவை நீதிபதி பி.புகழேந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, வியாபாரியிடம் பணம் பறித்த வசந்தியால் காவல்துறைக்கே களங்கம். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு காவல்துறை ஏற்படுத்த வேண்டும்.

காவலர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சாதாரண மக்கள் காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் விசாரணையை பாதிக்கும் என்பதால் வழக்கின் விவரத்தை தர இயலாது என்று கூறிய நீதிபதி, முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories