தமிழ்நாடு

எடப்பாடியின் உறவினர் எனக் கூறி ரூ.4.5 கோடி அபேஸ்: நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஓட்டுநர்கள்!

இடைத்தரகர்களாக செயல்பட்ட சக ஓட்டுநர்களை கைது செய்து பணத்தை திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

எடப்பாடியின் உறவினர் எனக் கூறி ரூ.4.5 கோடி அபேஸ்: நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஓட்டுநர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள நடமாடும் மருத்துவ குழு வாகன ஓட்டுநர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக கூறி 4.5 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறி 150க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது 2008ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு அதற்காக வாகனங்கள் கொடுக்கப்பட்டு ஓட்டுநர்களும் நியமிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் தற்காலிக வாகன ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பணி புரிந்து வந்த சக ஓட்டுநர்கள் வெற்றிவேல் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உறவினரான அம்மாசி என்ற அதிமுகவை சேர்ந்தவர் தங்களுக்கு பழக்கம் என்றும், அவர் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக ஓட்டுநர் ஒவ்வொருவரும் அவர்களின் வயதிற்கு ஏற்ப பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உறவினரான அம்மாசி என்பவருடன் கூட்டமும் நடத்தியுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவ குழு வாகன ஓட்டுநர்கள் அவர்களது வயதுக்கேற்ப ஒரு லட்ச ரூபாய் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை பணி நிரந்தரம் செய்வதற்காக ஓட்டுநர்களான வெற்றிவேல் மற்றும் பார்த்தசாரதியிடம் பணம் கொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள்
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள்

பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணமும் திருப்பிக் கொடுக்காததால் இதுகுறித்து பலமுறை வெற்றிவேல் மற்றும் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததோடு பணத்தை திருப்பிக் கேட்டவர்களை மிரட்டல் தோணியில் பேசியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நடமாடும் மருத்துவக் குழு வாகன ஓட்டுநர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் கூறும்பொழுது கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்ற பெயரில் தங்களிடம் பணி நிரந்தரம் செய்யவதாக கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு இதுவரை பணிநிரந்தரம் செய்யாமல் அலைக்கழித்து வந்ததாகவும் இதுகுறித்து பலமுறை தொலைபேசியில் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் 5க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததால் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெற்றிவேல் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீதும் அவர்களுக்கு பின்னால் உள்ள அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

banner

Related Stories

Related Stories