தமிழ்நாடு

"வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் கொன்றேன்": கொலையாளியின் வாக்குமூலத்தால் போலிஸ் அதிர்ச்சி!

சென்னை காசிமேட்டில் மீன்பிடித் தொழிலாளி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் கொன்றேன்": கொலையாளியின் வாக்குமூலத்தால் போலிஸ் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் கூடைகளைத் தூக்கம் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 29ம் தேதி ரத்த வெள்ளத்தில் கமலக்கண்ணன் இருந்துள்ளார். இதைப் பார்த்த சக மீனவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கமலக்கண்ணனின் ஊரைச் சேர்ந்த இளையராஜா என்பவர்தான் கொலை செய்தார் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர், இளையராஜாவைப் பிடித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் கமலக்கண்ணன் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தார். பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். சம்பவத்தன்று பணம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரத்தில் அருகே இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் அடிடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories