தமிழ்நாடு

கோர விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார்.. வேலை தேடி சென்னைக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் பலி!

சென்னை பெருங்களத்தூரில் பயங்கர விபத்தில் வேலை தேடி சென்னை வந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார்.. வேலை தேடி சென்னைக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை இண்டர்வியூ ஒன்றில் கலந்து கொள்ளுவதற்காக சென்னை வந்துள்ளனர்.

பின்னர் நண்பர்களுடன் தி.நகரில் பொருட்களை வாங்கிக்கொண்டு, இரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அதன் பின்னர், உடன் இருந்த நண்பர்களிடம் வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களிடம் இருந்த சொகுசு காரை மேட்டுரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடையாள தெரியாத வாகனம் மீது நவீன் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய சொகுசு கார், அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த டிரைலர் லாரியின் மீது மோதியது. 

கோர விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார்.. வேலை தேடி சென்னைக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் பலி!

இதில், லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த 5 பேரின் உடலைகளை தாம்பரம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடாடி காரில் இருந்து மீட்டனர். பலியான 5 பேரின் உடலையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்களத்தூரில் பயங்கர விபத்தில் வேலை தேடி சென்னை வந்த பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் உயிரிழந்தது சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories