தமிழ்நாடு

படிக்காம forward செய்தது ஏன்? மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? - S.ve.சேகருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை பாஜகவின் எஸ்.வி.சேகர் பகிர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

படிக்காம forward செய்தது ஏன்? மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? -  S.ve.சேகருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கெதிரான ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில், "அந்த பதிவை படிக்காமல் forward செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்" தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories