தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி.. மதுரை அருகே பரபரப்பு!

மதுரை-நத்தம் சாலையில் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில்  தொடங்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி.. மதுரை அருகே பரபரப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரையில் புதுநத்தம் சாலையில் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நத்தம் சாலையில் மதுரை சொக்கிகுளம் முதல் செட்டிகுளம் வரை 7 கி.மீ வரை மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் பறக்கும் பாலத்தில் நாகாணாகுளம் அருகே பாலத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

மதுரை - நத்தம் சாலையில் பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் ரூ.1,110 கோடியில் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய இப்பணி தொடர்ந்து காலதாமதமாக நடைபெற்றது. 40% பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் தற்போது இடிந்துள்ளது..

இந்தப் பகுதியில் பாலம் தேவையில்லை என கூறப்பட்ட நிலையில் தரமற்ற வகையில் கட்டப்பட்டு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories