தமிழ்நாடு

“நேரத்தை வீணாக்காதீங்க... இனி இப்படி பண்ணினா நடவடிக்கைதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

“நேரத்தை வீணாக்காதீங்க... இனி இப்படி பண்ணினா நடவடிக்கைதான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்து பேசுகையில், மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும்.

ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை.” என்றார்.

இந்நிலையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் நேரத்தின் அருமை கருதி என்னைப் புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னைப் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

banner

Related Stories

Related Stories