தமிழ்நாடு

“நாட்டையே அடமானம் வைக்கும் பிரதமர் மோடி” : ஒன்றிய அரசை கடுமையாக சாடிய திருமாவளவன் MP!

நாட்டையே அடமானம் வைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை என ஒன்றிய அரசை தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

“நாட்டையே அடமானம் வைக்கும் பிரதமர் மோடி” : ஒன்றிய அரசை  கடுமையாக சாடிய  திருமாவளவன் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதனால் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், மின்சாரக் கட்டமைப்பு, மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத் தொடர்பு, தானியக் கிடங்குகள், சுரங்கங்கள், பெட்ரோலிய நிலையங்கள், இயற்கை எரிவாயு என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தும தனியாருக்கு விற்கப்படுவதற்காக சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சொத்துக்களை விற்பதா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் சட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன், “நாட்டில் உள்ள பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதோ அல்லது அடமானம் வைப்பதோ மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உடனே இந்த தனியார் மயகொள்கையை ஒன்றிய அரசு கைவிடவேண்டும். இந்த நாசகரமான திட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். அரியலூர் மாவட்டத்தில் கேந்திரி வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்க எடுக்க வலியுறுத்தப்படும். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனிதா பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைப்பார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories