தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக கொரோனா தொற்று காலத்தில் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள். பட்டாச்சாரி யார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவி தொகை ரூ.4,000/-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.06.2021 அன்று துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் மூலம் சுமார் 11,065 திருக்கோயில் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் பதாகையை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக முதல்கட்ட மாக 46 திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை கோயில் முகப்பில் முக்கிய இடங்களில் பக்தர்கள் பலரும் எளிதில் காணும் வண்ணம் பதாகை வைக்கப்பட்டது. இப்பதாகைகளில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்களும் மற்றும் அலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் நாகலிங்க மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். இதன்படி தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அன்னைத் தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 14 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதலமைச்சர் அவர்களால் 12.08.2021 அன்று வெளியிடப்பட்டது.
சரித்திரம் போற்றும் சமத்துவ திட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட 24 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், ஒதுவார்கள், பூசாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருக்கோயில்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 12 நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் வளமாக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் 100 நாட்களில் தமிழ்நாட்டிலுள்ள 80 திருக்கோயில்கள், 30 திருக்குளங்கள், 25 நந்தவனங்கள், 50 திருத்தேர்கள், 10-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் - 187.98 ஏக்கரும், 165 மனைகள், 612 கிரவுண்டும், 1887.13 சதுர அடி கட்டிடங்கள், 15 கிரவுண்ட் 597 சதுர அடி திருக்குளக்கரையும் அறநிலையத் துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் திருக்கோயில் வசம் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின்மொத்த மதிப்பு சுமார் ரூ.628 கோடியே 23 இலட்சம் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையின் கல்விப் பணி காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலை. கீழ்ப்பாக்கம், அமைந்துள்ள 32 கிரவுண்டு நிலம் திருக்கோயில் வசம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 13.06.2021 அன்று சுவாதீனம் பெறப்பட்டது. இவ்விடத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை திருக் கோயிலே ஏற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருக்கோயில் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
பக்தர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய தனி இணைய தளம் திருக்கோயில் தொடர்பாக பக்தர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் பதிவு செய்திட ஏதுவாக “கோரிக்கைகளை பதிவிடுக” எனும் இணைய வழி திட்டம்22.05.2021 அன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு அதன்படி பக்தர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் மீது 30 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய இலவச அழைப்பு மையம் பொது மக்களின் குறைகள் தொலைபேசி மூலம் பெறப்பட்டு அவர்க ளுக்கு உடனடியாக பதில்கள் வழங்கும்திட்டத்தை 'அழைப்பு மையம்' (ஊயடட ஊநவேநச)துவக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப்பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வலர் குழுக்கள் மூலமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் செய்வதற்கு இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை 27.07.2021 அன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. திருக் கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு திருக்கோயில்களில் திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 539 திருக்கோயில்களில் முழுத்தூய்மை திட்டம் (மாஸ்) கிளினிங் செயல்படுத்தப்பட்டது. திருக்கோயில்களில் நில உரிமை ஆவணங்கள் தமிழ் நிலம் என்கிற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் 100 நாட்கள் பணி; வரலாற்றில் 100 ஆண்டுகள் கடந்தும் பேசும் இனி