தமிழ்நாடு

சிங்கார சென்னை 2.0-ல் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது? விவரங்கள் இதோ!

சிங்கார சென்னை 2.0-ல் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது? விவரங்கள் இதோ!
KrishClicks
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:-

சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை பசுமை நிலமாக மீட்டெடுத்தல்.

கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை சேகரித்து விஞ்ஞான முறையில் மறு சுழற்சி செய்தல். சென்னை மாநகரை குப்பை இல்லாத மாநகராய் மாற்றுதல்.

சுவரொட்டிகள் இல்லாத சென்னையாக மாற்றுதல்.

நவீனமயமான இறைச்சி கூடம் அமைத்தல்.

நகரம் முழுவதும் பொதுமக்களின் பங்களிப்புடன் மரம் நடும் பணிகள் நடைபெறும்.

நீர் நிலைகள் மற்றும் நீர் வழிதடங்களை புணரமைத்தல்.

ரிப்பன் கட்டடம், விக்டோரியா பொது மண்டபம், அடையாறு, சைதை, திருவிக பாலங்கள் வண்ண விளக்குகளால் அலகரிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நடை பாதை அமைத்தல்.

மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவித்தல்.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்தல்

நவீன நூலகங்கள் அமைத்தல்.

நகரத்தின் பல்வேறு பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

சென்னை தினம், சென்னை சங்கமம் போன்ற கலாசார நிகழ்வுகளை ஊக்குவித்தல்.

இது போன்ற பணிகள் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட உள்ள பணிகள் என அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories